2025 மே 02, வெள்ளிக்கிழமை

விபத்தில் குழந்தை பலி: சிறுவன் கைது

Freelancer   / 2025 பெப்ரவரி 23 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நேற்று (22) காலையில் முகமெல்பூரில் உள்ள பிர்னி சாலையில் 15 வயது சிறுவன் ஒருவன் தனது அண்ணனின் காரை ஓட்டிச் சென்றுள்ளான். இந்த நிலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் அங்கிருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மோதியது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக குழந்தையின் மாமா குழந்தையை, வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டிய சிறுவனையும், காரின் உரிமையாளரான அவரது அண்ணனையும், பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X