A.K.M. Ramzy / 2021 மார்ச் 10 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை :
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது என்று சொல்வதை விட விலக்கப்பட்டு விட்டது என்று சொல்லாமென தே.மு.தி.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தே.மு.தி.க.வின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் அனகை முருகேசன் கூறியதாவது: துவக்கத்தில் இருந்தே எந்த முக்கியத்துவமும் இல்லை. தொடர்ந்து அவமானப்படுத்தினர். இரு அமைச்சர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பா.ம.க.வை கெஞ்சி கூத்தாடி கூட்டணியில் சேர்த்துக் கொண்டனர்.
பா.ம.க. இருந்தால் தான் எடப்பாடி தொகுதியில் முதல்வரும் திருச்செங்கோட்டில் தங்கமணியும் வெற்றி பெறமுடியும் என்ற சூழல் இருக்கிறது.
அதனால் அவர்களுக்கு கட்சியை விட இந்த இரு தொகுதி களில் வெற்றி பெறுவது தான் முக்கியம். அதனால் பா.ம.க.வை மட்டும் எந்த நிலைக்குச் சென்றும் கூட்டணியில் தக்க வைத்துக் கொள்வது என முடிவெடுத்தனர் .பா.ஜ.வை விட அ.தி.மு.க.வுக்கு பா.ம.க. தான் முக்கியம். இது பா.ஜ.வுக்கும் கூட கோபம் தான்.
எங்கள் தரப்பில் ஏற்கனவே 2011ல் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் கேட்கப்பட்டது. எட்டு தொகுதிகளை கொடுப்பதாக கூறினர். ஆறு கட்டங்களாக பேசியும் அ.தி.மு.க. தரப்பில் ஏறி வரவில்லை.இறுதி கட்ட பேச்சின்போது 13 தொகுதிகள் கொடுக்கலாம் என்றனர்.
24 தொகுதிகளுக்கு கீழ் வேண்டாம் என தொண்டர்களும் மா.செ.க்களும் வலியுறுத்தினர். அ.தி.மு.க. விடாப்பிடியாக மறுக்க கூட்டணி முறிந்து விட்டது.தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சில் முதல்வரே கோபமாக பேசியிருக்கிறார். 'மக்கள் மத்தியில் கட்சி எங்குமே இல்லை.
13 தொகுதிகள் என்பதே அதிகம்.'வாங்கிய வாக்குகள் கட்சியின் நிலை எல்லாமே எங்களுக்கும் தெரியும். 'லேட்டஸ்ட் சர்வே' எடுக்கப்பட்டு உங்களை பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம்' என கூறியிருக்கிறார்.
10 minute ago
37 minute ago
58 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
37 minute ago
58 minute ago
6 hours ago