A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
வரலாறு காணாத பெற்றோல்- டீசல் - சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைச் செய்திருக்கும் பாஜக - அதிமுக அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக விலை குறைப்பு செய்ய வலியுறுத்தியும், திமுக சார்பில் வரும் 22ஆம் திகதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (17) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கட்டதாவது;
"ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.787.50இக்கு கண்ணைக் கட்டும் அளவுக்கு உயர்த்தி, சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக இல்லத்தரசிகளுக்கு ஒரு 'அதிர்ச்சி'ப் பரிசை அளித்துவிட்டுச் சென்றிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டிசம்பர் மாதத்தில், தலா 50 ரூபாய் வீதம், இரு முறை 100 ரூபாய் அதிகரிப்பு, பெப்ரவரி மாதத்தில் இரு முறை 75 ரூபாய் அதிகரிப்பு எனத் தாய்மார்களைக் கண்ணீர் சிந்த வைத்திருக்கும் மத்திய பாஜக அரசு, பெற்றோல், டீசல் விலையையும் கண்மூடித்தனமாகச் செங்குத்தாக உயர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெருமளவில் மகளிர், வணிகர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் உள்ளோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும் அனைவரையும் திமுகவின் சார்பில் அழைக்கிறேன்".இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago