Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 11 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசாம் மாநிலத்தில் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து கடவுள் வேடம் அணிந்து விழிப்புணர்வு நாடகம் நடத்திய நபருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
நகோன் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரும், இளம்பெண்ணும் சிவன், பார்வதி வேடம் அணிந்து ராயல் என்பீல்டில் பயணித்தபோது சாலையில் வாகனம் பழுதடைந்து நடு வழியில் நிற்பதை போலவும், அதன்பிறகு சிவனுடன் பார்வதி வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்றும் நாடகம் நடத்தியுள்ளனர்.
அப்போது, சிவன் வேடம் அணிந்த நபர் எரிபொருள் விலையேற்றம் குறித்தும், வேலையில்லா திண்டாட்டத்தின் பாதிப்பு குறித்தும் பேசி பார்வதி தேவியை சமாதானப்படுத்த முயன்றார்.
இந்நிலையில், இந்து மத உணர்வை புண்படுத்தும் விதமாக நாடகம் நடத்தியதாக இந்து அமைப்பினர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதனடிப்படையில் சிவன் வேடம் அணிந்து நாடகம் நடத்திய நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .