2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளுக்கு ஆதரவாக தெண்டுல்கர் கருத்து கூறவேண்டும்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை:

அமெரிக்காவைச் சேர்ந்த பொப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டர் தன்பர்க் ஆகியோர் சமீபத்தில் டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக டுவிட்டரில் கருத்து கூறியிருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

இந்நிலையில்,   சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரை சேர்ந்த ரஞ்சீத் பாகல் என்ற வாலிபர், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் வீட்டின் முன் ‘விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் எப்போது கருத்து கூறுவீர்கள் சச்சின்?' என்ற பதாகையுடன் நின்றுகொண்டு இருந்தார்.

வாலிபர் பதாகையுடன் நிற்கும் அந்தப் படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள மும்பையை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி, செய்தித் தொடர்பாளர் பிரீத்தி சர்மா மேனன், சச்சின் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் ஒரு முறை கருத்து பகிர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .