Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 24 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இ-மெயில் ஐடியின் முகவரியை மறைக்கும் குறியீட்டை உருவாக்கிய தமிழக சிறுவன், அதனை டெலிகிராம் மற்றும் பிற தளங்கள் வாயிலாக பகிர்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து , பெங்களூரில் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு இ-மெயில் அனுப்பியது குறித்த விசாரணையில், அதே மென்பொருள் தான் மெசேஜ் அனுப்பவும் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பிய இ-மெயிலின் இணைய முகவரிகளை மறைக்கும் மென்பொருள் உருவாக்கியதில் சிறுவனொருவன் கண்காணிப்பு வட்டத்தில் இருப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவனொருவனின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது, யார் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. விசாரணையில் அனைத்தும் தெரியவரும் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதியன்று, பெங்களூரில் உள்ள 16 பள்ளிகளுக்கு காலை 11 மணி முதல் 2.30 மணிக்குள் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அடுத்ததடுத்து வந்துள்ளது.
அந்த மெயிலில், உங்கள் பள்ளியில் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இது சும்மா ஜோக் இல்லை. உங்கள் பள்ளியில் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக பொலிஸாரை அழைக்கவும். நூற்றுக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளது. தாமதிக்க வேண்டாம், இப்போது எல்லாம் உங்கள் கையில் மட்டுமே உள்ளது' என குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர், மே 13 அன்று, போபாலில் உள்ள 12 கல்வி நிறுவனங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டது. அதில், 'உங்கள் பள்ளியில் 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. உடனடியாக காவல் துறையை அழைக்கவும். இது சும்மா ஜோக் இல்லை என்றும் மீண்டும் சொல்கிறேன் இது ஜோக் இல்லை. நூற்றுக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளது. விரைவாக செயல்படுங்கள் இன்னும் நேரம் இருக்கிறது அல்லது சோகமான முடிவை காணலாம். அதன்பிறகு, உங்களை எச்சரிக்கவில்லை என உங்களால் யாரிடமும் கூற முடியாது. இப்போது எல்லாம் உங்கள் கையில் மட்டுமே உள்ளது' என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தவகையில், பெங்களூர் பொலிஸார் சைபர் தீவிரவாத குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்தனர். அவர்களுடன் போபால் காவல் துறையும் இணைந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
பெங்களூரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி கூறுகையில், நாங்கள் ட்ரெக் செய்துள்ள சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் மெயிலை அனுப்பவில்லை. ஆனால், இணைய முகவரியை மறைக்கும் குறீயிட்டை டெலிகிராம் மற்றும் பிற தளங்களில் மின்னஞ்சல் அனுப்பியவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்று அச்சிறுவன் கூறியுள்ளான்.
அதேசமயம், பள்ளிகளுக்கு வந்த இ-மெயில் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கலாம் என காவல் துறை சந்தேகிக்கின்றன. மேலும் , இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago