2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெடிகுண்டு வீசிப் பிறந்த நாளைக் கொண்டாடிய இளைஞர்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம்: புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் நாட்டு வெடிகுண்டினை  வீசி வெடிக்க செய்யும் வீடியோக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கருவடிக்குப்பத்தை சேர்ந்த தர்மசீலன் என்ற குறித்த இளைஞன், அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது நண்பர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தனர்.

அதில் தர்மசீலன் தனது கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை தூக்கி வீசுவது போன்றும், அது வெடித்து சிதறி புகை மூட்டத்தை ஏற்படுத்தியது போன்றும் காட்சிகள் இடம்பெற்றன.

இவ் வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், தர்மசீலனை தொடர்ந்து தேடிவருவதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .