Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 01 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து திங்கட்கிழமை (01) காலை 9.10 மணியளவில் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள தூசு, நிறமாலை மற்றும் கருந்துளை மேக கூட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறது.
அத்துடன் திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழக மாணவிகள், பூமியின் மேல் பரப்பில் உள்ள புற ஊதா கதிர்கள் மற்றும் கேரள மாநிலத்தின் தட்பவெப்ப நிலை அறிந்து கொள்வதற்காக வெசாட் என்ற செயற்கைகோளை வடிவமைத்திருந்தனர்.
இந்த செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது.
இதற்கான இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் ஞாயிற்றுக்கிழமை (31) காலை தொடங்கிய நிலையில், திங்கட்கிழமை (01) காலை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை பொதுமக்கள், மாணவ-மாணவியர் கண்டு களித்தனர். இந்நிலையில் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர். உயரத்தில் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. எக்ஸ்போசாட் செயற்கைக்கோளில் சோலார் தகடுகள் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago