2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வெற்றிப் பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா சார்பில், ஒன்பது மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் 381 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்  அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .