2025 ஜூலை 19, சனிக்கிழமை

வேலைக்காக திருமணமான பெண்களுடன் உடலுறவு

Freelancer   / 2023 ஜூன் 29 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  திருமணமான பெண்களை ஏமாற்றிய ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது சேமகோட்டை ஊராட்சி ஒன்றியம். இந்த கிராமத்தில் மணிவண்ணன் என்பவர் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இணையதளங்களில் மணிவண்ணன் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகின. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

அதில் மணிவண்ணன் தங்கள் கிராமத்தை சேர்ந்த குடும்பப் பெண்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாகவும், பல்வேறு சலுகைகள் பெற்றுத் தருவதாகவும் கூறி தவறான உறவில் இருந்துவிட்டு, அதனை அவரது செல்போன் மூலமே வீடியோவாக எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X