A.K.M. Ramzy / 2020 நவம்பர் 05 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகல்பூர்:
பீகார் மாநிலம் நவுகாச்சியா பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. இதனால் படகில் பயணித்த சுமார் 100 பேரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதிய நிலவரப்படி 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றில் விழுந்த பலரது நிலை என்ன ஆனது? என்று இதுவரையும் தெரியவில்லையெனவும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .