A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா எதிர்வரும் 24ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இதை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 123 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து அவர்களுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
அதன்படி கோவை சிறுவாணி மெயின் ரோட்டிலுள்ள பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு இன்று காலை 123 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டது.
விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மங்கல நாண் எடுத்து கொடுத்து 123 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தினர். திருமண ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்களையும் வழங்கினர்.
முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவில் பல்வேறு மதத்தைச் சேர்ந்த திருமண ஜோடிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு அவரவர் மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago