2026 மார்ச் 04, புதன்கிழமை

2ஆவது இந்திய ஒற்றுமை பயணம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் திகதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார்.

இந்த யாத்திரை கேரளா, கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக பயணித்து, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி காஷ்மீரின் ஶ்ரீநகரில் முடிவடைந்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இரண்டு குஜராத் மாநிலத்தில் தொடங்கி வடக்கிழக்கு மாநிலமான மேகாலயாவில் முடிவுறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், செய்தியாளர்களை சந்தித்த போது இதை உறுதி செய்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .