Freelancer / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில் 200 முறை தோப்புக்கரணம் போடுமாறு மாணவிகளை பாடசாலை அதிபர் பாடாய்படுத்திய நிலையில், அவர்களில் 50 பேர் மயங்கி, சரிந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரசு பாடசாலை ஒன்றில் மாணவிகள் ஒழுங்காக படிப்பதில்லை, உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, பாடசாலையின் அதிபர் மாணவிகளை அழைத்து அவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளார். அனைவரும் 3 நாட்கள் தொடர்ந்து 200 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்பதே அது.
இந்நிலையில், தோப்புக்கரணம் போட, போட மாணவிகள் ஒவ்வொருவரின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. சிலர் கால்கள் வீங்கியபடி கதற அப்போதும் தண்டனை நிறுத்தப்படவில்லை என்று தெரிகிறது.
தொடர்ந்து மாணவிகள் தோப்புக்கரணம் போட்டதால் கிட்டத்தட்ட 50 மாணவிகள் அங்கேயே மயங்கி, சரிந்து விழுந்திருக்கின்றனர்.
இதைக்கண்டு அதிர்ந்த மற்ற ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் பூதாகரமாகிய நிலையில், இதுகுறித்து பெற்றோர் சார்பில் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.S
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago