Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரியின் தேர்தல் மன்னன் பத்மராஜன் 221ஆவது முறையாக புதுச்சேர் மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். தேர்தலில் தான் தோற்றால் மகிழ்ச்சி எனவும் 62 வயதான அவர் தெரிவித்தார். , இதுவரை தேர்தலில் வைப்புத்தொகைக்காக ரூ.50 இலட்சம் வரை செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
1988 ஆம் ஆண்டு முதல் பல தேர்தல்களில் வேட்புமனுத் தாக்கல் செய்வது வழக்கம். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, நகராட்சி, சட்டப்பேரவை, பாராளுமன்ற மக்களவைத், மாநிலங்களவை, குடியரசுத் தலைவர் தேர்தல்கள் வரைப் பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டுள்ளார்.
ஆனால், எதிலும் அவர் வெற்றி பெற்றதில்லை. தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். வேட்புமனுத் தாக்கலுக்காகவே லிம்கா, கின்னஸ் புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளார். இதனால் தேர்தல் மன்னன் பத்மராஜன் எனவும் அழைக்கப்படுகிறார்.
மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர்த்துப் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் அவர், 221 ஆவது முறையாக புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
21 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago