Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 07 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 07 ஆம் திகதி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெறும் பெரும்பாலான இடங்கள் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால், பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நக்சலைட்டுகளின் கோட்டை என வர்ணிக்கப்படும் தண்டேவாடா பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில், காங்கிரஸ் சார்பில் சவிந்திர கர்மாவும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சார்பில் சைத்திரன் அதானியும் களத்தில் உள்ளனர். இருவருமே முன்பு தடை செய்யப்பட்டிருந்த சுல்வா ஜுடும் என்ற அமைப்பில் பங்கு பெற்றிருந்தவர்கள் ஆவர். இதற்கு முன்பு இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸின் மகிந்தர கர்மா மற்றும் பாஜகவின் பீமா மண்டவி ஆகிய இருவரும் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்திருந்தனர்.
இத்தகைய பரபரப்பான சூழலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொகுதியில் உள்ள கரிகுண்டம் கிராம மக்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்களித்து வருகின்றனர். பழங்குடியினத்தை சேர்ந்த சுமார் 600 பேர் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தில், பல ஆண்டுகளாக நக்சலைட்டுகளின் பாதிப்பால் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படாததால் அவர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago