2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

23 தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் கைது

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

23 மீனவர்கள் இலங்கைப் படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால்,மீனவர்களுக்கு  நிரந்தர தீர்வு தேவை என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

"வங்கக் கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமான மூன்று படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.   கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல் கண்டிக்கத்தக்கதாகும்.

கோடியக்கரை பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த கடற்படையினர் தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தனர்.

தமிழக மீனவர்கள் 23 பேரும் கோடியக்கரை பகுதியில் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த  படையினர், தமிழக மீனவர்களை கைது செய்து அவர்கள் இலங்கை எல்லையில் உள்ள நெடுந்தீவு கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்தபோது கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.  கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.இதேவேளை, இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைவதும் இயல்பானது தான். அத்தகைய சூழல்களையே கைது இல்லாமல் மென்மையாக கையாள வேண்டும் என்று பன்னாட்டு அமைப்புகள் அறிவுறுத்தி வரும் நிலையில், இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதை மத்திய அரசாங்கம்  கண்டிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .