Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2024 நவம்பர் 03 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக( தவெக) தலைமைக் கட்சி அலுவலகத்தில் விஜய் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (0 3) செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மொத்தம் 138 நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தை ஆளும் திமுக அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்கட்டண வசூலானது மாதாந்திர கணக்கீட்டு முறையின்படி அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு இன்னும் இதனை நிறைவேற்றாமல் உள்ள நிலையில், இதனை நிறைவேற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு கண்ணியத்தோடு பதிலடி கொடுக்கவேண்டும். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் விஜய் அறிவுரைகள் கூறியுள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்தக் கூட்டத்தில் 26 தீர்மானங்களை தவெக நிறைவேற்றி உள்ளது.
வக்ஃபு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்; தமிழ் மொழியில் தலையிட மத்திய அரசுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் உரிமை இல்லை; உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்; ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கைக்கு கண்டனம்; பாலியல் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க சட்டத்திருத்தம் தேவை; மாதம் ஒரு முறை மின் கணக்கெடுப்பு என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு செயல்படுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநில அரசுப் பட்டியலில் வழங்க வேண்டும்; கால நிர்ணயம் செய்து மதுக்கடைகளை மூடவேண்டும்; சாதிவாரி கணக்கெடுப்புப் பணியை மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசைக் காரணம் காட்டும் தமிழக அரசுக்கு கண்டனம்; பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என மொத்தம் 26 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது தவெக.
தவெக மாநாட்டுக்கு வந்தபோது உயிரிழந்த 6 பேருக்கு இரங்கல் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி விக்கிரவாண்டியில் நடந்ததைத் தொடர்ந்து, அடுத்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டு உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
34 minute ago
40 minute ago