Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 27 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணமகனை தனது திருமணத்துக்கு ஜேசிபி இயந்திரத்தில் அழைத்துச் செல்லப்படும் காணொளி வைரலாகியுள்ளது. இது இமாச்சல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விழாக்களில் கிராண்ட் என்ட்ரி கொடுப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக மணமகன் ஒருவர் தனது திருமண நிகழ்வுக்கு தனித்துவமான முறையில் வந்துள்ளார்.
சிம்லாவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, கிரிபார் பகுதியின் சங்கரா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணம் சங்கரா கிராமத்தில் இருந்து 30 கி.மீ தள்ளியிருக்கும் ரத்வா கிராமத்தில் நடக்கவிருந்தது. திருமணத்தன்று காலை மணமகன் ஊர்வலம் மூலமாக ரத்வா கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சில கிலோமீட்டர் சென்ற நிலையில் ஊர்வலம் கடும் பனிபொழிவால் தடைப்பட்டது. சில இடங்களில் பாதை மூடப்பட்டிருந்ததால் அங்கிருந்து மேலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை பார்த்த மணமகனின் தந்தை இரண்டு ஜேசிபி இயந்திரங்களை வரவைத்தார்.
ஒரு ஜேசிபியில் மணமகனும், மற்றொரு ஜேசிபியில் மணமகன் குடும்பத்தினரும் பயணம் செய்தனர். சுமார் 30 கி.மீ ஜேசிபியிலேயே பயணம் செய்தவர்கள் திருமணத்துக்கு குறித்த நேரத்தில் கிராமத்தைச் சென்றடைந்தனர்.
அதன்பின் அங்கு திருமண சடங்குகள் அனைத்தும் செய்துவிட்டு அனைவரும் மணமகளுடன் சங்கரா கிராமத்துக்கு திரும்பினர். இந்த வீடியோக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வேடிக்கையான காணொளியை இதுவரை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர்.
20 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
7 hours ago