Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 23 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கும்பமேளாவுக்கு வந்த ரயிலில் தீ விபத்து என வதந்தி பரப்பிய குற்றச்சாட்டில் 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் நோக்கி வந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 300 பேர் உயிரிழந்ததாக, கடந்த 14ஆம் திகதியன்று சமூகவலைத்தளங்களில் வீடியோ பரவியது.
இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், அது பங்களாதேஷில் கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து எரிந்த வீடியோ என்பது தெரியவந்தது.
இந்த வீடியோவை கும்பமேளாவுக்கு வந்த ரயிலில் தீ விபத்து என பொய் செய்தி பரப்பியது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக பொலிஸார் 34 சமூகவலைத்தள கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .