2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

4 மாத கர்ப்பத்தில் சந்தேகம்; கணவனைக் கொன்ற மனைவி

Editorial   / 2022 ஜனவரி 13 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

4 மாத கர்ப்பத்தில் சந்தேகம்;   கணவனைக் கொன்ற மனைவி

கத்தியைக் கொண்டு தாக்க முயன்ற கணவனை, அதே கத்தியை பிடுங்கி மனைவி கொலை செய்திருக்கும் சம்பவம் விழுப்புரத்தில் நேற்று (12) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாயக்கன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.  

கட்டட வேலை செய்து வந்த இவர், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சென்னையில் கட்டட வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட சந்தோஷ், தனது சொந்த ஊரான திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகளும் 6 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனராம்.

இந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் நாயக்கன் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தன் மனைவி, குழந்தைகளுடன் குடியேறினாராம் சந்தோஷ். தற்போது சந்தோஷின் மனைவி ராணி, 4 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. மனைவியின் கர்ப்பத்தின் மீது சந்தேகம் கொண்ட இவர், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கருவை கலைக்கும் முயற்சியிலும் இந்த தம்பதி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தோஷ் மது அருந்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. மனைவியுடன் வாக்குவாதம் செய்த அவர், ஒருகட்டத்தில் கத்தியை எடுத்து மனைவியை தாக்க முயன்றாராம்.

இந்தத் தகராறில் சந்தோஷின் கையிலிருந்த கத்தியை பிடுங்கிய ராணி, அவரை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ராணியை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .