Freelancer / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரேநாளில் 5 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற இச்சம்பவத்தால், ஐந்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர், அவை அனைத்தும் போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்கு சென்று ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் இந்த விமானம் கனடாவில் தரையிறக்கப்பட்டது.
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தமாம் (சவுதி அரேபியா)- லக்னோ இண்டிகோ விமானம், தர்பங்கா- மும்பை ஸ்பைஸ்ஜெட், சிலிகுரி- பெங்களூரு ஆகாசா ஏர் ஆகிய விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்- பெங்களூரு விமானம் அயோத்தி வழியாக செல்லும் விமானம் ஆகும். இந்த விமானம் அயோத்தியில் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
விமானங்கள் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என, விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்டு அங்கு பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டன.
இதேபோன்று, திங்கட்கிழமை (14), மும்பையில் இருந்து புறப்பட்ட மூன்று சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அவையும் புரளி எனத் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago