2025 மே 02, வெள்ளிக்கிழமை

50 இலட்சம் நேபாள பக்தர்கள் புனித நீராடல்

Freelancer   / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரயாகராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட நேபாள பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அயோத்தியில் ஸ்ரீ ராமரையும், காசியில் பாபா விஸ்வநாத்தையும் நேபாள பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித மண் மற்றும் கங்கை நீரை நேபாள பக்தர்கள் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். 

சிலர் அதை நெற்றியில் தடவிக்கொள்கின்றனர். அவ்வாறு எடுத்து செல்லப்படும் புனித மண் மற்றும் கங்கை நீர் பல்வேறு மத விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது என்று, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X