Ilango Bharathy / 2022 நவம்பர் 17 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவர் தனது கணவரைக் கொலைசெய்து 7 அடி ஆழம் கொண்ட குழியொன்றில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரைச் சேர்ந்த `சவிதா` என்ற பெண், தனது கணவர் `சந்திரவீர்` என்பவரைக் காணவில்லை எனவும், தனது கணவரின் இளைய சகோதரனின் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இப்புகார் அளிக்கப்பட்டு 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அண்மையில் குற்றப் பிரிபுப் பொலிஸார் இது குறித்து சவிதாவின் மகளிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
விசாரணையின் போது சவித்தாவின் மகள் ” எங்களது வீட்டுக்கு பக்கத்துவீட்டு அருண் மாமா அடிக்கடி வருவார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அருண் மீது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ”சவிதாவும் அருணும் 2017ஆம் ஆண்டில் இருந்து தகாத உறவில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் இவர்களது விடயம் சவிதாவின் கணவருக்குத் தெரிய வரவே ஆத்திரமடைந்த அவர் சவிதாவை கடுமையாகத் தாக்கியுள்ளார் எனவும், இதனால் சவிதா அருணுடன் சேர்ந்து சந்திரவீர் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார் எனவும், பின்னர் அவரது தலையை கோடாறியால் வெட்டி காட்டுப்பகுதியில் புதைத்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாது , சந்திரவீரைக் கொலைச்செய்வதற்கு முன்னரே, இருவரும் 7 அடிக்கு குழியொன்றைத் தோண்டி வைத்துள்ளனர் எனவும் அக் குழியில், சந்திரவீரின் உடலை புதைத்து, அதன் மீது சீமெந்து நிரப்பியுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அருண் மற்றும் சவிதாவைப் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026