2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

72 பாம்பு குட்டிகளை கடத்திய இளம்பெண்

Freelancer   / 2023 செப்டெம்பர் 10 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து பிராணிகள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வந்து இறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பாங்காக் விமானத்தில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை பொலிஸார் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அப்போது ஒரு பெண் பயணி தனது உடைமைகள் இருந்த பெட்டிகளை விட்டுவிட்டு வேகமாக சென்று விட்டார். அந்த பெட்டிகளை திறந்து பார்த்தபோது 72 பாம்புகள் குட்டிகள் மற்றும்  6 குரங்குகள் இறந்து கிடந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தலைமறைவான பெண்ணை  பொலிஸார் தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X