Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜூன் 18 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த தராசு கிராமத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா (80). இவர், திங்கட்கிழமை (16) மாலையில் புலவனூர் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மூதாட்டியை சவுக்குத் தோப்புக்குள் இழுத்துச் சென்று, அவரை பாலியல் வன்கொடுமை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
சவுக்குத் தோப்பில் மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியை அப்பகுதியினர் மீட்டு, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கடலூர் மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில், ஆய்வாளர் வேலுமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் மேல்மாம்பட்டில் ஒரு முந்திரி தோப்பில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல்கிடைத்தது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (17) காலை அங்கு சென்ற பொலிஸார், பண்ருட்டி எஸ்.கே. பாளையத்தைச் சேர்ந்த சுந்தரவேல் (25) என்பவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், வீச்சரிவாளால் காவலர் குபேந்திரனின் வலது கையில் வெட்டிவிட்டு, மற்றொரு காவலர் ஹரிஹரனை வெட்ட முயற்சித்தார். உடனே, ஆய்வாளர் வேலுமணி, துப்பாக்கியால் சுந்தர வேலுவை சுட்டுப் பிடித்தார். காயமடைந்த காவலர் குபேந்திரன் பண்ருட்டி அரசு மருத்து வமனையிலும், சுந்தரவேல் முண்டியாம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago