Editorial / 2025 நவம்பர் 05 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்து சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் கடுமையான கவலையை எழுப்பியுள்ளது.
சமீபத்திய தகவல்கள் கவலையளிக்கும் போக்கைக் காட்டுகின்றன என்றும், அதிகமான சிறுமிகளும் இளம் பெண்களும் பல்வேறு பொருட்களுக்கு ஆபத்தான விகிதத்தில் அடிமையாகி வருவதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் தெரிவித்ததுள்ளார்.
காவல்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவுகள் மற்றும் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, பெண்கள் மத்தியில் ஐஸ் (மெத்தாம்பேட்டமைன்), மாத்திரைகள், மதுபானம் மற்றும் சிகரெட் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்களிடையே போதைப்பொருள் அடிமையாதல் அவர்களின் குழந்தைகளின் அறிவுசார் மற்றும் உடல் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
வளர்ந்து வரும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும், தேவையான ஆதரவு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை வழங்கவும் அமைச்சகம் ஏற்கனவே ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago