2025 நவம்பர் 05, புதன்கிழமை

நான்காவது இரவில்: அக்கா கணவருடன் புதுப்பெண் ஓட்டம்

Editorial   / 2025 நவம்பர் 05 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 40 வயதான இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மத்துடன் உறவினர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக திருமணம் நடந்தது. தற்போது இவரது மனைவி 7 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்தநிலையில் சந்திரனின் மனைவி 32 வயதான தனது வயதான தனது தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். நீலாம்பூரில் உள்ள கோவிலில் அந்த திருமணம் நடந்தது.இந்தநிலையில், திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அதிர்ச்சி அடைந்த மணமகன் சூலூர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதேசமயம் மணப்பெண்ணின் அக்காள் கணவரான சந்திரனும் மாயமாகி இருந்தார். இதனால் சந்திரனுடன் தான் புதுப்பெண் சென்று இருக்க வேண்டும் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை தொடங்கினர். இரண்டு பேருடைய செல்போன் எண்களின் டவர்களையும் ஆய்வு செய்தபோது அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது உறுதியானது. இதனையடுத்து 2 பேரையும் பிடித்து பொலிஸார், பொலிஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். புதுப்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே தனது அக்காள் கணவரான சந்திரன் உடன் பழக்கம் இருந்தது வந்தது.

இதனை இரண்டு பேரும் வெளியே தெரியாமல் பக்குவமாக பார்த்துக்கொண்டுள்ளனர். இவர்களது பழக்கத்தை அரசல் புரலசாக அறிந்த சந்திரனின் மனைவி அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். மாப்பிள்ளை வீட்டுக்கு அரைமனதுடன் சென்ற புதுப்பெண், தனது அக்கா கணவரை நினைத்து நினைத்து ஏங்கி உள்ளார். உடனே சந்திரனை தொடர்பு கொண்டு எனக்கு வாழ பிடிக்கவில்லை உங்களுடன் சேர்ந்து இருந்து விடுகிறேன் என கூறி இருக்கிறார். சந்திரனும் அதற்கு சம்மதம் தெரிவிக்க விட்டால் போதும் என்று புகுந்தவீட்டை விட்டு 2 பேரும் வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X