Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 04 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை:
Bulli Bai என்ற செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில் அதற்கு பின் இருக்கும் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த செயலிக்கு பின்பாக வேறு பெரிய கும்பல் இருக்கும் வாய்ப்பு உள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்தான் Sulli Deals என்ற செயலி முடக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஏலம் விடும் Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டு சர்ச்சையாகி உள்ளது. வடஇந்தியாவில் முஸ்லிம் பெண்களை இழிபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தை பிரயோகம் Sulli என்பது ஆகும்.
இதை அடிப்படையாக வைத்து முதல் ஆப் உருவாக்கப்பட்டது. அது தடை செய்யப்பட்டதும் Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இது முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை ஏலம் விட்டு கமெண்ட் செய்யும் செயலி ஆகும்.
Bulli Bai செயலி முஸ்லிம் பெண்களை அவமதிக்கும் வகையில் அவர்களை ஏலம் விடுவது போல அவர்களின் புகைப்படங்களை பகிரும் தளம்தான் இந்த Bulli Bai செயலி. பொதுவாக இந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படம் பதிவேற்றப்படும்.
யூசர் ஒருவர் இதை லாக்இன் செய்கிறார் என்றால், அவருக்கு ஒரு முஸ்லிம் பெண்ணின் புகைப்படம் திரையில் தோன்றும். இவர்தான் உங்களின் சுல்லி.. இவரை ஏலம் விடுங்கள் என்று கூறும். அந்த பெண்ணை அதே ஆப்பில் இருக்கும் மற்ற யூசர்களுக்கு இவர் ஏலம் விட வேண்டும்.
கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? இதைத்தான் முதலில் Sulli Deals என்ற பெயரிலும் இப்போது Bulli Bai என்ற பெயரிலும் வக்கிர கும்பல் என்று நடத்தி உள்ளது.
கடந்த வருடம் ஜூலை 4 ஆம் திகதி இந்த Sulli Deals செயலி கண்டுபிடிக்கப்பட்டு அது இணையம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஆப் தடை செய்யப்பட்டாலும் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த முறை Bulli Bai செயலி கண்டுபிடிக்கப்பட்டு அது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
இந்த நிலையில் புதுடெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் Bulli Bai செயலி தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது.
பொலிஸார் சார்பில் இதில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த ஆப்பை நடத்தும் portal ஒரு பக்கம் தடை செய்யப்பட்டது.
அதேபோல் இந்த செயலி செயல்படும் github தளத்திற்கும் அந்த ஆப்பை உருவாக்கியது யார் என்று கேட்டு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதில் கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத காரணத்தால் பலர் இதை கேள்வி எழுப்பி இருந்தனர்.
5 minute ago
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
2 hours ago