2025 ஜூலை 23, புதன்கிழமை

FIFA உலகக் கோப்பை; வைரலாகும் ஆர்ஜென்டினா தேநீர்க் கடை

Ilango Bharathy   / 2022 நவம்பர் 28 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காற்பந்து ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘ FIFA  உலகக் கோப்பைத் தொடரானது‘ கடந்த 20 ஆம் திகதி கட்டாரில்  கோலாகலமாக ஆரம்பமானது.

டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து 32 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.

 இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தின், இச்சாப்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த காற்பந்து ரசிகரான ஷாஹிப் ஷங்கர் பந்த்ரா என்பவர்  தனது வீடு மற்றும்  தேநீர் கடையுடன் கூடிய 3 மாடிக் கட்டிடத்தை ஆர்ஜென்டினாவின் தேசியக்  கொடியின் நிறமான நீளம் மற்றும் வெள்ளை நிறத்தில்  வர்ணம்  பூசி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

குறிப்பாக ஆர்ஜென்டினா அணியின்  நட்சத்திர காற்பந்து வீரரான  மெஸ்ஸியின் தீவிர ரசிகரான அவர், மெஸ்ஸியின் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்டும், ஆர்ஜென்டினா அணியின் கொடிகளைக் கொண்டும்  தனது தேநீர் கடையை அலங்கரித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பகுதியை அனைவரும் ‘குட்டி ஆர்ஜென்டினா‘ என அழைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரது கடைக்கு ஏராளமான மக்கள் வருகை தருவதாகவும் இதனால் அவர்களது  வருமானமும் அதிகரித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்த்ரா மட்டுமல்லாமல் அவரது மகள் நேகா கூட தீவிர ஆர்ஜென்டினா அணியின் ரசிகை எனவும், இதனால் அவரது கல்யாண உடையும் அர்ஜென்டினா அணியின் நிறத்திலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .