Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம் : பணவரவுகள் அதிகரிப்பதால் புதிய உற்சாகம் பிறக்கும். குழந்தைகள்பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும்.
ரிஷபம் : இன்று சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாது இருப்பது நல்லது. தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள். முயன்றால் வெற்றி நிச்சியம்.
மிதுனம் : ஆரோக்கியம் மேம்படும். படுக்கை சுகங்கள், நல்ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்அதிர்ஷ்டம் என எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். வருமானம் சேரும் வளம் மிக்க நாள்.
கன்னி : புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும் நாள். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.
மகரம் : அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.
கடகம் : இன்று கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முயலவும்.
சிம்மம் : பிறருக்கு உதவி புரிவதில் பேரின்பம் அடைவீர்கள். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு மற்றும் பெண்களால் இலாபம் ஏற்பட மனம் மகிழும்.
துலாம் : இன்று, தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானங்கள செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் வசந்த காலமென நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மீனம் : வீட்டில் திருட்டைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. காரியத்தடைகள் மற்றும் பணயிழப்புகள் ஏற்படலாம்.
தனுசு : புதிய தொழில் பயிற்சி மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.
விருச்சிகம் : இன்று, அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் பயன் பெறலாம். மனைவியின் கலகத்தால் உறவுகளிடையே உரசல்கள் ஏற்படலாம். பொருள்களை கவனமாகப் பாதுகாத்தால் இழப்பைத் தவிரக்கலாம்.
கும்பம் : உங்கள் திறமையை முழுமையாகக் காட்டிச் செயல்பட்டாலும் மேலிடத்தில் திருப்தி இருக்காது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால் தேவையற்ற விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago