Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 08 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: பூர்வீக சொத்துக்களை கொண்டு புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாரிசுகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும்.
ரிஷபம்: உடல் தோற்றப்பொலிவில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களிடம் உறவுநிலை மேம்படும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.
மிதுனம்: உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். கடன் தொல்லைகள் குறையும். சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
கடகம்: சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும்.
சிம்மம்: தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்கள் புத்திக்கூர்மையின் மூலம் பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.
கன்னி: தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
துலாம்: பணியில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கவலைகள் தோன்றும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். எதிர்பாராத வீண் அலைச்சல்கள் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
விருச்சகம்: தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும்.
தனுசு: தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும்.
மகரம்: தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடக்கவும். தொழில் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.
கும்பம்: பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடுபடும். நீர்வழி தொழிலின் மூலம் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய செயல்களை செய்வதன் மூலம் தனலாபம் உண்டாகும்.
மீனம்: முயற்சிகள் ஈடேறக்கூடிய அனுகூலமான சூழல் உண்டாகும். கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் ஏற்படும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்கள் அமைதி போக்கினை கடைபிடிப்பது நல்லது. உடன்பிறப்புகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும்.
10 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
55 minute ago