2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

இன்றைய பலன்கள் (05.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (05.01.2011)
 

மேடம்
தூய்மையான உடைகளை அணியலாம், அரச உத்தியோகஸ்தரால் ஆதாயம் கிடைக்கும், குடும்பத்தில் சொந்தபந்தங்களினால் உற்சாகம் ஏற்படும்.
அஸ்வினி: நன்மை
பரணி: ஆதரவு     
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்
எடுத்த காரியங்களை முடிப்பதற்கு அலைச்சல்கள் ஏற்படும், அதிக பேச்சுக்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், மனஅழுத்தங்கள் ஏற்படுதல்.
கிருத்திகை 2, 3, 4: பகை
ரோகிணி: கவலை
மிருகசீரிடம் 1, 2: சிரமம்


மிதுனம்
பொன், பொருள் சேர்க்கை ஏற்படும், இன்பகரமான செய்திகள் கிடைக்கும், நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: நற்செய்தி
திருவாதிரை: நட்பு
புனர்பூசம்: தகவல்


கடகம்
வியாபாரத்தில் சில மறைமுக எதிர்ப்புக்கள் ஏற்படும், திருடர்களிடம் அவதானம் தேவை, உணவில் விரும்பமின்மை ஏற்படும்.
புனர்பூசம்: வெறுப்பு
பூசம்: போட்டி
ஆயில்யம்: கவனம்


சிம்மம்
இறை பூஜைகள், வழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும், இனிய உறக்கம் கிடைக்கும், தனவரவு ஏற்படுதல்.
மகம்: அதிர்ஷ்டம்
பூரம்: ஆன்மீக சிந்தனை
உத்திரம் 1ஆம் பாதம்: நிம்மதி


கன்னி
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், அறிமுகமற்ற நபர்களின் பேச்சுகளினால் மனஸ்தாபம், பிறரின் அதிர்ப்தியான செயல்கள்.
உத்திரம் 2, 3, 4: விசித்திரம்
அஸ்தம்: சிக்கல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: வாதம்


துலாம்
குடும்பத்தில் நலன்விரும்பிகளின் வருகை, தொழிலில் நவீன சாதனங்களினால் ஆதாயம், விநோதங்களுக்கு அதிக செலவு செய்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மை
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: விரயம்


விருட்சிகம்
சரும நோய்கள் வந்து நீங்கும், பகைவர்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், தீய நண்பர்களின் சகவாசங்களினால் துன்பம்.
விசாகம் 4: பொறுமை
அனுசம்: பயம்
கேட்டை: சுகயீனம்


தனுசு
பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், மனதால் அலைச்சல்கள் ஏற்படுதல், நீண்ட தேசங்களிலிருந்து புதிய செய்தி கிடைக்கும்.
மூலம்: குழப்பம்
பூராடம்: தகவல்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆதரவு


மகரம்
காணாமல்போன பொருள் கிடைத்தல், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், தெய்வீக வழிபாடுகளினால் மனஅமைதி கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: சுபம்
திருவோணம்: நிம்மதி
அவிட்டம் 1, 2: நாவடக்கம்


கும்பம்
குடும்பத்தில் சொந்தங்களின் ஆதரவு அதிகரித்தல், பணவரவு ஏற்படும், வியாபாரத்தில் நவீன நுட்பங்களை செயல்படுத்தல்.
அவிட்டம் 3, 4: லாபம்
சதயம்: அனுகூலம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி


மீனம்
புதிய காரியங்கள் பின்தள்ளப்படுதல், பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, ஒவ்வாத உணவினால் உபாதைகள் ஏற்படும்.
பூரட்டாதி 4: கவனம்
உத்திரட்டாதி: நலன்கேடு
ரேவதி: தோல்வி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .