2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (23.04.2012)

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்றைய பலன்கள் (23.04.2012)



மேடம்
பல புதிய காரியங்களுக்கு உண்டான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இலாபம் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
அஸ்வினி: இன்பம்
பரணி: உற்சாகம
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்
செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கிருத்திகை 2, 3, 4: பயம்
ரோகிணி: துன்பம்   
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்


மிதுனம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பணத்தட்டுப்பாடுகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். புதிய தொழில் அமைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: தொடர்புகள்


கடகம்
உணவு விஷயத்தில் சிறிது வெறுப்புகள் காணப்படும். கை, கால் இவற்றில் வலிகள் ஏற்பட்டு நீங்கும். பயணங்கள் அலைச்சல் உடையதாய் இருக்கும்.
புனர்பூசம்: துன்பம்
பூசம்: துக்கம்
ஆயில்யம்: வெறுப்பு


சிம்மம்
அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய வருகை நல்ல மகிழ்ச்சியைக் கொடுக்கும். மகிழ்ச்சியான காரியங்கள் நடைபெறும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


கன்னி
வேண்டாதவர்களுடைய நட்புக்களைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் எதிர்பாராத விதமாக நஷ்டங்கள் உண்டாகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலவிதமான சிக்கல்கள் தோன்றும்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: நட்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துக்கம்


துலாம்
புதிய தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கப்பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: செலவு



விருட்சிகம்
தொழிலில் அவ்வளவாக இலாபம் இருக்காது. வியாபாரத்தில் திடீர் நட்டங்கள் உண்டாகும். வேண்டாத பேச்சுகளால்; மனக்கஷ்டங்களை அடைய நேரிடும்.
விசாகம் 4ஆம் பாதம்: துக்கம்
அனுசம்: துன்பம்
கேட்டை: நட்டம்


தனுசு
அரசினரால் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய வியாபார முயற்சிகள் கைகூடி வரும்.  தொழிலில் தனலாபம் கிட்டும். காரியத்தில் வெற்றிகள் தேடி வரும்.
மூலம்: வெற்றி
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்



மகரம்

பெண்களுடன் விவாதங்கள் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும்.  மற்றவர்களினால் பிரச்சனைகள் காணப்படும்.  எல்லா விஷயங்களிலும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
உத்திராடம் 2, 3, 4: சிக்கல்
திருவோணம்: துன்பம்
அவிட்டம் 1, 2: துக்கம்



கும்பம்
மகிழ்ச்சியான செய்திகள் நம் இல்லம் தேடி வரும். வியாபாரத்தில் புதிய வழிகள் பிறக்கும்.  இதனால் இலாபமும் மகிழ்ச்சியும் கிட்டும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: இலாபம்



மீனம்
மனதில் சில விதமான பயங்கள் தோன்றி மறையும். பணியாளர்களி;டத்தில் சிலவிதமான கருத்து வேறுபாடுகள் காணப்படும். பணிச்சுமைகள் அதிகம் காணப்படும்.
பூரட்டாதி 4: பயம்
உத்திரட்டாதி: தடை
ரேவதி: துன்பம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .