2021 ஜூன் 24, வியாழக்கிழமை

அமெ. ஜனாதிபதி பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு திடீர் விஜயம்

Super User   / 2010 மார்ச் 29 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கான சமாதானத்தை வென்றெடுப்பதற்கு உதவியளிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்பினர் மத்தியில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

அத்துடன், அமெரிக்கத் துருப்பினருக்கும் பராக் ஒபாமா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் ஹர்சாயை சந்தித்து உரையாடிய பராக் ஒபாமா, ஊழல் நடவடிக்கைகளை ஒழிக்குமாறும் வலியுறுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்ட பின்னர், முதற் தடவையாக ஆப்கானிஸ்தானுக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதேவேளை, எதிர்வரும் மே மாதம் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் ஹர்சாய் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .