2021 ஜூன் 19, சனிக்கிழமை

அமெ. நியுயோர்க் நகரில் கார்க் குண்டுத் தாக்குதல் முயற்சி;பொலிஸார் அறிக்கை

Super User   / 2010 மே 04 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் கார்க் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தமை தொடர்பில் விசாரணை நடத்தியுள்ள பொலிஸார் அறிக்கையொன்றை தயாரித்துள்ளனர்.

குறித்த காரின் உரிமையாளரை பொலிஸார் கண்டுபிடித்திருப்பதுடன், அந்தக் காரின் உரிமையாளர் மூன்று வாரங்களுக்கு முன்னர் குறித்த காரை விற்பனை செய்திருப்பதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலுள்ள ரைம்ஸ் சதுக்கத்தில் கடந்த இரண்டாம் திகதி காரொன்றில் வெடிபொருள்கள் காணப்பட்டிருந்தன. இதனால், குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த நியுயோர்க் பொலிஸார், குண்டை செயலிழக்கச் செய்திருந்தனர்.

இதேவேளை, இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்று யூட்யூப் இணையதள ஒளிநாடா மூலம் அந்த அமைப்பு குறிப்பிட்டிருந்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .