2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஈராக் தேர்தல் வாக்குகளை மீள எண்ணுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

Super User   / 2010 மார்ச் 23 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் வாக்குப் பதிவுகளை மீண்டும் எண்ணுமாறு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை ஈரானின் தேர்தல்கள் ஆணையகம் நிராகரித்துள்ளது.

ஈராக் நாட்டு ஜனாதிபதி ஜலால் தலபானி  மற்றும் பிரதமர் நூரி மலிக்கி ஆகியோர் வாக்குப் பதிவுகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தேர்தல் வாக்குகளை மீள எண்ணுவது சாத்தியமற்றது என்பதுடன், தேர்தல் மோசடிகள் தொடர்பில் ஏற்கனவே கண்காணிக்கப்பட்டிருப்பதாகவும்   தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதிலுள்ள கால தாமதமானது, மோசடிகள் எழக்கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .