Editorial / 2017 மே 24 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில், மத்தியப் பிரதேசத்தின் இந்தோர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 யாத்திரிகர்கள் பலியாகினர். உத்தர்காசி என்ற பகுதியில், பாகிரதி ஆற்றுக்குள் விழுந்தே, இந்த விபத்து ஏற்பட்டது.
நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், வீதியிலிருந்து 300 மீற்றர்கள் கீழாக, பஸ் விழுந்துள்ளது.
இந்த விபத்து இடம்பெறும் போது, சுமார் 30 பக்தர்கள், பஸ்ஸில் பயணித்துள்ளனர்.
இந்த யாத்திரிகர்கள் அனைவரும், ரயிலில் பயணம் செய்து, வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு, பஸ்ஸில் திரும்பியுள்ளனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தே, பஸ் விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டாலும், என்ன காரணத்துக்காக இந்த விபத்து இடம்பெற்றது என்ற உறுதியான தகவல், இதுவரை வெளியிடப்படவில்லை.
24 minute ago
38 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
38 minute ago
53 minute ago
1 hours ago