2021 ஜூன் 14, திங்கட்கிழமை

எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தில் மோடி

Editorial   / 2017 மே 26 , மு.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுநருமான எம்.ஜி. இராமச்சந்திரனின் பிறந்த தினக் கொண்டாட்டங்களில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதற்குச் சம்மதித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

அ.இ.அ.தி.மு புரட்சித் தலைவி அம்மா பிரிவினர் (பன்னீர்செல்வம் அணி) நடத்தும் கொண்டாட்டத்திலேயே அவர் கலந்துகொள்ளவுள்ளதாக, அப்பிரிவு தெரிவிக்கிறது. இந்தக் கொண்டாட்டங்கள், ஒக்டோபரில் இடம்பெறவுள்ளன.

இந்தப் பிரிவின் தலைவர்கள், நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினர். அண்மையில், பிரதமர் மோடியை இவர்கள் சந்தித்திருந்த நிலையில், அது தொடர்பாக, உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதேபோல், எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள், இப்பிரிவின் எதிர்கால நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள் ஆகியோரோடு, சிரேஷ்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, எம்.ஜி.ஆரின் பிறந்தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், அந்தக் கோரிக்கையை, பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார் எனவும் அறிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .