2021 மே 14, வெள்ளிக்கிழமை

கொரோனா தொற்றால் ஐரோப்பாவில் 35,000 பேர் பாதிப்பு

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு ஐரோப்பாவில் ஏறக்குறைய 35,000 பேர் இதுவரை ஆளாகியிருக்கின்றனர்.

அவற்றுள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி என்பதுடன், அங்கு மேலும் சுமார் 2,800 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 175க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கிருமித்தொற்றால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21ஆயிரத்தையும் தாண்டிவிட்டது.

அத்துடன், உயிரிழந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,400ஆகும்.

இதேவேளை, இத்தாலிக்கு அடுத்தபடியாக நாளையிலிருந்து ஸ்பெயின் முழுவதும் 30 நாட்களுக்குமுடக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்குச் செல்வதற்கும் உணவு வாங்குவதற்கும் தவிர வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .