Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால், யேமன் தொடர்பாகவழங்கப்பட்டுள்ள சமாதானத் திட்டத்துக்கான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக, ஹூதி ஆயுதக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, யேமன் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அறிவதற்காக, ஐக்கிய நாடுகளின் தூதுவரொருவர் யேமனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இந்நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபனி துஜர்றிக், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும், கைப்பற்றப்பட்டுள்ள இடங்களிலிருந்து பின்வாங்கவும் நாட்டிலுள்ள அரசியல் மாற்றத்தைப் பாதிப்பதைத் தடை செய்யவும் கோரிக்கை விடுக்கும் இந்தத் தீர்வுத் திட்டத்தை ஹூதிகள் ஏற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், ஜனாதிபதி அஹாடி, சவூதி தலைமையிலான கூட்டணி ஆகியன பேச்சுவார்த்தைகளை நிராகரித்துவரும் நிலையில், யேமன் தொடர்பான சூழ்நிலையில் பாரியளவிலான மாற்றங்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாதென, ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .