2021 ஜூன் 19, சனிக்கிழமை

தாய்லாந்தில் ஆர்ப்பாட்டக்காரரை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்;ஒருவர் பலி

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில்  சிவப்பு நிற ஆடை அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்ச் சம்பவத்தையடுத்து, அவசரக் கூட்டமொன்றை நடத்துவதற்கு உயர் அதிகாரிகளுக்கு தாய்லாந்துப் பிரதமர் அபிஹிஸிற் விஜ்ஜஜீவ அழைப்பு விடுத்துள்ளார்.

தாய்லாந்து அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறும், புதிதாக தேர்தலொன்றை நடத்துமாறும் கோரி முன்னாள்ப் பிரதமர் தக்ஸின் சினவத்ராவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .