2021 ஜூன் 16, புதன்கிழமை

நைஜீரிய இனக்கலவரத்தில் 200 பொதுமக்கள் பலி;32 பேர் காயம்

Super User   / 2010 மார்ச் 09 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் சுமார் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளனர். 

கொல்லப்பட்டவர்களில் பெண்களும், சிறுவர்களும் அடங்குவதாகவும் நைஜீரிய நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவிலுள்ள  ஜோஸ் நகரில் முஸ்லிம் மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கலவரத்தில் 428 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்த 28 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் அதேவேளை, குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .