2021 ஜூலை 31, சனிக்கிழமை

நைஜீரியாவில் தேவாலயக் கூரை தகர்ந்தது: 200 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்கு நைஜீரியாவிலுள்ள தேவாலயமொன்றின் கூரையொன்று தகர்ந்ததில், பல இறப்புகளும், காயங்களும் ஏற்பட்டதாக, அந்நாட்டின் ஜனாதிபதி முஹம்மது புஹாரி நேற்றுத் (10) தெரிவித்ததோடு, 200 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என அரச ஊடகம் கூறியுள்ளது.

அக்வா இபோம் மாநிலத்தின் தலைநகரான உயோவிலுள்ள தேவாலயத்தின் கூரையானது தகரும்போது, குறித்த தேவாலயமானது பிரார்த்தனை செய்வோரினால் நிரம்பியிருந்தது. குறித்த கூரையின் கட்டுமானப் பணிகள் இன்னும் பூர்த்தியடையாமல் இருந்ததாக உள்ளூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 50 தொடக்கம் 200 வரையானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அரசினால் நடாத்தப்படும் நைஜீரிய செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 60 உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் தரங்களில் விட்டுக்கொடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என, அக்வா இபோம் மாநில ஆளுநர் உடோம் எமானுவேல் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .