2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பக்தாத் தாக்குதல்கள்: 27 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2017 மே 30 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில், இன்று (30) இடம்பெற்ற இரண்டு வெடிப்புகளில், குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இன்று நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர், கர்ரடாவிலுள்ள, சனநெருக்கடிமிகுந்த ஐஸ் கிறீம் கடையொன்றில் இடம்பெற்ற மோசமான முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 75 பேர் காயமடைந்தனர். இதில், கொல்லப்பட்டவர்களில், சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். இத்தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோரியிருந்தது.

புனித ரமழான் மாதம், கடந்த சனிக்கிழமை (27) ஆரம்பித்திருந்த நிலையில், பகல் நேரங்களில் நோன்பிருக்கும் முஸ்லிம்கள், சூரியன் மறைந்த பின்னர், தங்களது நோன்புகளை முடிக்கும் நேரத்தில், பக்காத்திலுள்ள உணவகங்கள், கபேக்கள், மிகுந்த சனநெருக்கடியாக இருக்கும் நேரத்திலேயே, மேற்படி தாக்குதல் நடைபெற்றுள்ளது.   

இந்நிலையில், அல்-ஷகடா பாலப் பகுதியில், இன்று காலை இடம்பெற்ற இரண்டாவது மோசமான வெடிப்பில், குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதுடன், 41 பேர் காயமடைந்ததாக, பாதுகாப்பு மூலங்களும் சம்பவத்தைக் கண்டவர்களும் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .