2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பாகிஸ்தானில் இன்று குண்டுத் தாக்குதல்;8 பேர் பலி

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 35 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இரண்டு பொலிஸ் உத்தியோகர்த்தர்கள் மற்றும் தொலைக்காட்சி புகைப்படப்பிடிப்பாளர் ஒருவரும் அடங்குகின்றனர்.

தென்மேற்கு பாகிஸ்தானிலுள்ள வைத்தியசாலைக்குள்ளேயே இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதலையடுத்து, துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப்  அலி சர்தாரி தனது கண்டனத்தை  வெளியிட்டிருக்கும் அதேவேளை, இந்தக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபத்தையும் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் அரசாங்கம் உறுதியாகவிருப்பதாகவும் ஆசிப் அலி சர்தாரி குறிப்பிட்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .