2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பரிஸ் தாக்குதல்கள்; மூன்றாவது சடலமும் மீட்கப்பட்டது

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 20 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரிஸ் தாக்குதல்களையடுத்து பரிஸ் புறநகரான சென்ற் டெனிஸில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை இடம்பெற்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து மூன்றாவது சடலமும் அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலையடுத்து, நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும், அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. 

எனினும் மேற்படி நடவடிக்கையின்போது தன்னை வெடிக்க வைத்துக் கொண்ட பெண்ணான ஹஸ்னா எய்த்பௌலாசென்னின் கடவுச்சீட்டு, அவரது கைப்பையில் இருந்து மீட்கப்பட்டிருந்தது. 

இதேவேளை, மேற்படி தேடுதல் வேட்டையின் போது, கொல்லப்பட்டவர்களில் ஒருவராக, பரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரி என நம்பப்படும் அப்டெல்ஹமிட் அபாவுட்டும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X