Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 30 , பி.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாத்மா காந்தி படுகொலையில் மேலும் ஒருவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசபிதா மகாத்மா காந்தி, கடந்த 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி, நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தி படுகொலைக்கு, நாதுராம் கோட்சே, விநாயக் தாமோதர் சாவர்கர் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில், நாதுராம் கோட்சே, நாராணயன் ஆப்தே ஆகியோருக்கு, அடுத்தாண்டு (1949) நவம்பர் மாதம் 15ஆம் திகதி, மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
காந்தி கொலை வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என்றும் இதன் பின்னணியில் உள்ள மிகப் பெரிய சதியை கண்டறிய, புதிய விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தில், மும்பைையச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பங்கஜ் ஃபட்னீஸ் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “மகாத்மா காந்தி மீது 4 குண்டுகள் பாய்ந்துள்ளன. அவரை சுட்ட கோட்சேவின் துப்பாக்கியில், 7 குண்டுகள் மட்டுமே பொருத்த முடியும். மேலும் அவரது துப்பாக்கியில் 3 குண்டுகள் சுடப்பட்டு மீதமிருந்த 4 குண்டுகளை பொலிஸார் பறிமுதல் செய்திருந்தனர்.
“ஆனால், காந்தியின் உடலை துளைத்த 4ஆவது தோட்டா யாருடையது?. இந்தப் படுகொலை தொடர்பாக, கடந்த 1966ஆம் ஆண்டு நீதிபதி ஜே.எல்.கபூர் தலைமையிலான விசாரணை குழு நடத்திய விசாரணையில், பல்வேறு உண்மைகள் தோண்டி எடுக்கப்படவில்லை.
“காந்தியின் கொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. இதனால் பல்வேறு உண்மைகளை நாட்டுக்கு தெரியப்படுத்த, புதிய விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
2 hours ago
22 Oct 2025
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
22 Oct 2025
22 Oct 2025