2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ரோகிஞ்சா மக்களை ‘மோரா’வும் விட்டுவைக்கவில்லை

Editorial   / 2017 மே 31 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷை நேற்று  தாக்கிய மோரா சூறாவளியில், குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டு, 50 பேர் காயமடைந்த நிலையில், இந்த அனர்த்தத்தில் பிரதானமாகப் பாதிக்கப்பட்டவர்கள், மியான்மாரிலிருந்து இடம்பெயர்ந்து, பங்களாதேஷில் தங்கியுள்ள ரோகிஞ்சா இன முஸ்லிம்களே என அறிவிக்கப்படுகிறது.

கடும் மழையோடு, மணிக்கு 135 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றுக் காரணமாக, எதுவுமே செய்ய முடியாத நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டனர்.

மோராவால் பெருமளவு தாக்கப்பட்ட பகுதியாக, பங்களாதேஷின் எல்லைப்பகுதி அமைந்தது. அங்கேயே, ரோகிஞ்சா இன மக்கள், தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் தாக்கிய சூறாவளி காரணமாக, அன்று இரவு, மழையிலேயே கழிக்க வேண்டியேற்பட்ட அந்த மக்கள், இன்றே, தங்கள் முகாம்களின் எஞ்சியவற்றைச் சேர்க்க முடியுமாக அமைந்தது.

இனங்களுக்கிடையிலான மோதல், இராணுவத்தில் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து தப்பியோடிவந்த மக்கள், தற்போது இயற்கையின் தாக்கத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.
அங்குள்ளவர்களில், அதிக ஆபத்தைச் சந்திக்கக்கூடியவர்களா இருந்தவர்களை வெளியேற்றுவதிலேயே - கர்ப்பந்தரிந்த பெண்கள் போன்றோர் - அதிக கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது. இதனால், ஏனையோர் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, முகாமொன்றின் குழுத் தலைவரொருவர் தெரிவிக்கும் போது, “கடினமான நேரத்தை நாங்கள் கடந்துள்ளோம். எங்களுடைய தலைக்கு மேல், தகர அல்லது பிளாஸ்டிக் கூரைகள் காணப்படவில்லை. கிட்டத்தட்ட அனைவருமே, இரவை மழையில் கழித்தோம். எங்களிடம் காணப்பட்டவற்றை, எங்களால் முடிந்தளவு, பிளாஸ்டிக் விரிப்புகளைக் கொண்டு மூடிக் காப்பாற்றுவதற்கு நாங்கள் முயன்றோம்” என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .