Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 29 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது மருமகன் ஜரேட் குஷ்னர், ரஷ்யாவுடன் இரகசியத் தொடர்பாடல்களை ஏற்படுத்த முயன்றார் என்ற அறிக்கைகளை, சோடிக்கப்பட்டவையென நிராகரித்துள்ளார்.
தனது ஒன்பது நாள் வெளிநாட்டுப் பயணத்தின்போது, டுவிட்டரில் அமைதியாகவிருந்ந ஜனாதிபதி ட்ரம்ப், தனது அதிரடியை நேற்று (28) மீண்டும் ஆரம்பித்தார். ரஷ்யாவுடனான உறவுகள் என்று கூறப்படுவதை, போலிச் செய்திகள், சோடிக்கப்பட்ட பொய்கள் என ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்தார்.
“போலிச் செய்திகளை வழங்கும் ஊடகங்களில், தகவல் மூலங்கள் தெரிவித்தன என்ற வார்த்தைகளை நீங்கள் எப்போது காணும்போதும், அவர்கள் பெயரைக் குறிப்பிடுவதில்லை. அந்தத் தகவல் மூலங்கள் இல்லாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால், இவை போலிச் செய்தி எழுத்தாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. போலிச் செய்திகளே எதிரி” என டுவிட்டரில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்னொரு டுவிட்டில், “எனது சமூக வலைத்தளப் பாவனையை இழிந்துரைப்பதிலும் கிறுக்காக்குவதிலும், போலிச் செய்தி ஊடகங்கள் கடுமையாகப் பணியாற்றுகிறது. ஏனெனில், உண்மையான கதையை அமெரிக்கா கேட்பதை, அவர்கள் விரும்பவில்லை” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வு அதிகாரிகளைத் தாண்டி, இரகசியத் தொடர்பாடல் முறையொன்றை ரஷ்யவர்களுடன் ஏற்படுத்த குஷ்னர் முயன்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், “குறிப்பிட்ட எண்ணிக்கையான நாடுகளுடன் பின்கதவு வழித் தொடர்பாடல்களை நாங்கள் கொண்டுள்ளோம்” என, ஜனாதிபதி ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மக்மஸ்டர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago